Friday, January 17, 2014

கிரக உச்சம், நீசம் என்றால் என்ன?

சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார்...சூரியனின் அதிக பட்ச கதிர்கள் பூமியை வந்து அடிக்கிறது...பூமி சூரியனின் சுற்று பாதையில் அருகில் செல்கிறது....ஐப்பசி மாதம் குளிர் காலம்...பூமி சூரியனிடம் இருந்து குறைந்த பட்ச கதிர்களை பெறுகிறது.....நீசம் என்று சொல்லாம்....

பூமி இன் சுற்று பாதையை,சாய்வு போன்ற அளவுகளை பொறுத்து கிரகங்களிடம் இருந்து அதிக கதிர் ,அல்லது குறைந்த கதிர்களை பெறுவதை உச்சம் நீசம் என்கிறோம்...
அப்படியானால் சூரியன் இரவில் தெரிவதில்லை....கதிர்கள் வந்து அடைவதில்லை எனினும் அடித்த வெய்யிலின் ஆகர்ஷ்ணா சக்தி பூமியில் இருக்கும்..

இதே போல் சந்திரனை ஆய்வுக்கு எடுத்து கொண்டால் இது பூமியின் துணைக்கோள் மற்றும் அளவில் 2 1/2 நாள் தான் ஒரு ராசி மண்டலத்தின் கீழ் வருகிறது..அதே சமயம் பகல் இரவு ,திதி போன்றவற்றின் அடிப்படையில் சந்திரனின் கதிர் வீச்சின் அளவு மாறுகிறது...ஆகார்ஷ்ணா சக்தி மாறுகிறது....
இது போல் மற்ற கிரகங்கள் கதிர்களும் பூமியை வந்து குறைந்த அளவோ அல்லது மிகுந்த அளவோ ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் தாக்குகின்றன.

கிரகங்கள் உள்வட்ட கிரகங்களா,வெளி வட்ட கிரகங்களா என்பதை பொருத்தும் கதிர் வீச்சின் அளவு மாறுகிறது....இதற்கு ஏற்ப கிரகங்களின் உச்ச நீச வீடுகளை நம் ரிஷிகள் தீர்மானித்து உள்ளனர்...
ஒரு கிரகம் உச்சம் பெற்றால் நன்மை செய்யும்,நீசம் பெற்றால் தீமை செய்யும் என்பது தவறான கருத்து..

No comments:

Post a Comment