Thursday, March 12, 2015

ராகு கேதுவும்-சூட்சம காரண சரீரமும்




கால சக்கரத்தில் 8ம் பாவம் ஸ்தூல உடல் உயிரை குறிக்கிறது .7ம் பாவம் உடல் உயிர் பிரிவதை காட்டுகிறது .9ம் பாவம் உடலில் இருந்து உயிர் பிரிந்த பின் சூட்சம சரீரத்தை குறிப்பிடுகிறது.எனவே தான் 9ம் பாவத்தை முன்னோர் சூட்சம சரீர(பித்ரு) தோஷம் உள்ளதா என ஆராயப்படுகிறது.

ராகுவே மரண காரகன் என அழைக்க படுகிறார்.சூட்சம சரீரதுக்கு காரண மாகிறார் .சிலர் வாழும் காலத்தில் சூட்சம சரீரத்தை ஸ்தூலசரீரத்தை விட்டு பிரித்து பிரபஞ்சம் எங்கும் சுற்றி வரும் ஆற்றல் பெற்று இருப்பர்..இவர்கள் ராகு வின் ஆதிக்கம் மிகுந்து காணபடுபவர்கள் ஆக இருப்பர் .

சூட்சம சரிர வலுவை பொறுத்தே உடல் வலு இருக்கும்..எனவே தான் கால சக்கரத்தில் 3 7 11 (திருவாதிரை ,சுவாதி ,சதயம்-போக சக்தி ,போகத்தை அனுபவித்தல் ,திருப்தி )என்ற காம திரிகோணத்தை ராகு ஆள்கிறார்.

ஒரு குறிப்பிட்ட நோய் வருகிறது எனில் அதன் பாதிப்பு சூட்சம உடலில் ஏற்கனவே தெரிய ஆரம்பித்து விடும் ..சூட்சம சரீரதுக்கு எங்கே இருந்து ஆற்றல் வருகிறது அல்லது எது காரணமாக உள்ளது எனில் அதுவே காரண சரீரம்,. இதுக்கு காரண கர்த்தா கேது ..


எண்ணங்கள் அற்ற தூக்கத்தில் அல்லது எண்ணங்கள் அற்ற விழிப்பு நிலையில் காரண சரீரம் பிரம்மத்தில் இருந்து ஆற்றலை சூட்சம சரீரம் வழி ஸ்தூலசரீரதுக்கு கொடுக்கிறது .

பிறவிக்கான காரணத்தை கேது குறிபிடுகிறார் எனவே தான் கால சக்கரத்தில் முதல் நட்சத்திரம் கேதுவின் அஸ்வினி .. மேலும் 1ம் பாவத்துக்கு விரய பாவமான 12ல் கேது இருப்பின் பிறவிக்கு இனி எந்தவொரு காரணமும் இல்லை மோட்சம் என்பதாகிறது ...எனவே தான் கால சக்கரத்தில் 1 5 9 (அஸ்வினி ,மகம் ,மூலம் -தற்போதைய பிறவி காரணம் ,வரும் பிறவி காரணம்,முன் பிறவி காரணம் )என்ற திரி கோணத்தை ஆள்கிறார்..

ராகு கேது நிழல் கிரகம் எனவும் ,அவர்கள் வலுவானவர்கள் என்று சொல்ல இதுவே காரணமாக இருக்க முடியும் ..

ராகு சனி என்ற கர்ம காரகனுடன் சேரும் போது காமத்தை (ஆசையை ) வரம்புக்கு மீறி அனுபவிப்பதும் ,மேலும் துர் மரணம் , அல்லது போதையில் கூட சிலர் சூட்சம உடலை கண்டு வருவது போன்றவை நடக்கும்..ராகு சனி சேரும் இடத்தை பொருத்து பலன் மாறுபடும் ...

கேது சனி யுடன் சேரும் போது காமத்தை (ஆசையை ) ,கர்மத்தை அனுபவித்து அழிக்கிறார்..
கேதுவின் போதை என்பது ஞானிகள்,யோகிகள் மோன நிலை என்ற தியான போதையில் இருப்பது போன்று ..
ராகுவின் போதை என்பது ஒரு திரைபட நடிகர் புகழ் ,பெண் போன்ற போதையில் தன்னை மறப்பது போன்று..இது பொது பலன் ..மற்ற கிரக சேர்க்கைக்கு ஏற்ப போதை யின் அளவு ,காரணம் மாறுபடும் ..


சித்தர்கள், யோகிகள் குரு+கேது+சனி சேர்க்கை எனில் ,போலி 
ஞானிகள், திரை பட நடிகர்கள்,   சுக்கிரன்+ராகு+சனி  என்று சொல்ல முடியும் ..
ராகு கேது அமிர்தம் உண்டவர்கள் ,அழிவில்லை என்று மறைமுகமாக கூற காரணம் சூட்சம ,காரண சரீரம்  சிவ நிலை என்னும் பிரம்மத்திடம் இருந்து அமிர்தம் ஆகிய ஆற்றலை பெரும் தகுதி கொண்டது என்பதலாயே இருக்க முடியும்..

Wednesday, March 4, 2015

அம் மனம்




மனம் அஉம் என்ற நாதத்துடன் சேரும் போது அம் மனம் ஆகிறது .... அம் மனம் மே ஞானம்.... மனதை அம் -மனம் ஆக்காமல் துணி இல்லாமல் சுற்று வதால் ஞானம் உண்டாகுமா ??

ஆண் மூலம் அரசாளும்...பெண் மூலம் நிர் மூலம்-ஏன்?





ஆண் மூலம் அரசாளும்...பெண் மூலம் நிர் மூலம்.... இதன் உண்மை பொருள் என்ன ?? பெண் கிரகம் ஆன சந்திரன்(சந்திர கலை ) கேது(அக்னி கலை)க்கு உரிய மூல நட்சத்திரத்தில் நிற்கும் போது மனதை அழித்து நிர் மூலம் ஆக்கும்... ,மேலும் இது குருவுக்கு உரிய தனுசு ஆதலால் மன மற்ற ஞான நிலையை தரும்.... ஞானிகளில் பலர் மூல நட்சத்திரத்தில் பிறந்து உள்ளது குறிப் பிடத்தக்கது ..... இதே போல ஆண் கிரகமான சூரியன்(சூரிய கலை) மூல நட்சத்திரம் தில் நிற்கும் போது , சூரியன் குரு இணைவின் காரணமாக அரச பதவிகளில் அமரும் வாய்ப்பு உண்டாகும் ..இதுவே ஆண் மூலம் அரசாளும். என்பதன் பொருள் ..