Monday, April 28, 2014

நரேந்திர மோடி ஜாதகம் -ஒரு ஆய்வு..




இவரது ஜென்ம நட்சத்திரம் சனி ஆகி அவர் சுக்கிரன் உப நட்சத்திரத்தில் நின்றார்...இவர்கள் 3 4 7 10 12 குறிப்பினர் ஆவது ஜாதகரின் தகிரியம்,ரிஸ்க் எடுத்தல்,தன்நம்பிக்கை,பொது வாழ்வில் வெற்றி,புகழ் போன்றவற்றை காட்டுகிறது..

12ம் பாவ குறிப்பினர் ஆவது மட்டும் சிறு குறைபாடு..இவர் எதிரிகளிடம் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.

லக்ன உப நட்சத்திர அதிபதி செவ்வாய் 10 பாவத்துக்கும் உப நட்சத்திர அதிபதியாக வருவது சிறப்பு..அரசியலில் இவர் வீரத்துடன் செயல் ஆற்றுவதற்க்கு இந்த அமைப்பு காரணம் ஆகிறது...செவ்வாய் 8 12 க்கும் நட்சத்திர அதிபதியாக வருவது விபத்து,உயிர் கண்டம் போன்றவற்றை தரும்...செவ்வாய் இவருக்கு 1 2 4 5 6 12 குறிப்பினர் ஆவது நெறைய எதிரிகளை பெற்று தருவார் என்பதை காட்டுகிறது..

இவருக்கு 2 5ம் பாவங்கள் கேது சனி ஆள்வது குடும்பம் இல்லை.. பத்தாம் பாவத்தில் ஐந்து கிரகங்கள் உள்ளன.... சுக்கிரன் சனி புதன் சூரியன் கேது உள்ளன....சூரியன் கேது 10ல் உள்ளதால் குடும்பம் இல்லாதவராகவும் அதே சமயம் அரசாள்பவராகவும் உள்ளார்..


நடப்பு சந்திர திசை 1 3 4 7 9 10 12 தொடர்பு பெறுவதும்,ராகு புத்தி 3 4 10 தொடர்பு பெறுவதும் இவர் பிரதமர் ஆவதை உறுதி செய்கின்றன..ராகு 3 4 10 தொடர்பு பெறுவது அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து பதவி ஏற்பதை காட்டுகிறது.. 8 வருடம் கழித்து வரும் (2021 அக்டோபர் க்கு பிறகு வரும் காலம்) செவ்வாய் திசை தான் இவருக்கு சோதனை காலம்...செவ்வாய் 3ம் பாவ உப நட்சத்திர அதிபதியின் நட்சத்திரத்தில் இருந்து தன் சொந்த உப நட்சத்திரத்தில் இருந்து 1 2 4 5 6 8 12 தொடர்பு பெற்று திசை நடத்துவது நோய்,விபத்து போன்ற உயிர் கண்டங்களை தரும்....

Thursday, April 10, 2014

KP ஜோதிடம் அடிப்படை


பாரம்பரிய முறையில் சந்திரன் நின்ற நட்சத்திரம் வைத்து திஷா,புத்தி,அந்தரம்,சூட்சமம் கணிக்கிறார்கள் ...சந்திரன் நின்ற நட்சத்திரம் டிக்ரீ துல்லியமாக இருப்பதால் தான் இதன் அடிப்படையில் திசா,புத்தி,அந்தரம்,சூட்சமம் அனைத்தும் நாம் அறிகிறோம்.. இதையே நாம் ஏன் மற்ற கிரகங்கள் மற்றும் பாவங்கள் எந்த நட்சத்திரத்தில் நிற்கின்றன என்பதை டிக்ரீ துல்லியமாக கணிக்க கூடாது என ஜோதிட மாமேதை திரு KSK அவர்கள் நினைத்தார்....அதன் அடிப்படையில் உருவானது தான் KP SYSTEM.இப்போது கிரகங்கள் ,பாவங்கள் போன்றவை சந்திரன் நிற்கும் நட்சத்திரம் டிக்ரீ துல்லியமாக தெரிவதை போல தெரிந்து கொள்ள முடியும்....அனைத்து கிரகமும்,12 பாவமும் எதன் நட்சத்திரம்(திசை),புத்தி(உப நட்சத்திரம்),அந்தரம்(உப உப நட்சத்திரம்),சூட்சமம்(உப உப உப நட்சத்திரம்) நிற்கிறது என்று தெரிந்து விடுகிறது...
எனவே பாரம்பரிய முறை போல மேலும் கிரகங்களை நவ அம்சம்,சப்த அம்சம் என பிரிக்க வேண்டியதில்லை...
என்னுடைய மானசீக ஜோதிட குரு இவரே..

Wednesday, April 2, 2014

பொது பலனும் அதன் பின் உள்ள உண்மையும்.......


சித்தர் பாடல் கிரக சேர்க்கை அனைத்தும் பலன் பொருந்தி வருவதில்லை....சித்தர் இறுதியில் என்ன சொல்லுகிறார் என்றால் லக்னம், பாக்கிய இஸ்தானம் ,கிரக வலிமை பார்த்த பின் தான் கிரக சேர்க்கைக்கு பலன் சொல்ல சொல்லி உள்ளார்.....
உயிர் (லக்னம்,பாக்கியம்) இல்லாத பிணதுக்கு பலன் சொல்லுவது போல தான் வெறும் கிரக சேர்க்கைக்கு பலன் சொல்லுவது என்பது.....இறுதியில் அந்த சித்தர் சொன்னார் இந்த சித்தர் சொன்னார் என்றால் நம் ஆட்கள் பேசாமல் சென்று விடுவார்கள்....அந்த சித்தர் சொன்னார் இந்த சித்தர் சொன்னார் என்றால் நமக்குள் உள்ள சித்தர் என்ன தூங்கி கொண்டு உள்ளாரா ???

சித்தர்கள் சரியாக தான் சொல்லி சென்று உள்ளார்கள்......அதை சரியாக புரிந்து கொள்ளாதது நம் தவறு ஆகவே இருக்கும்...நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்று சொன்னவர் சிவ வாக்கியார்......அதன் உட்பொருளை உணர வேண்டும்..