Wednesday, March 19, 2014

ஜோதிட கணக்கும்-ஆண்டவன் கணக்கும்!!!


முதலில் ஜோதிடம் சொல்லும் போது ஆதி
அந்தமற்ற தன்மைக்கு தான் ஜாதகம் போட வேண்டும்...பின் இந்த பேரண்டத்துக்கு ஜாதகம் போட வேண்டும்...பின் அண்டதுக்கு ஜாதகம் போட வேண்டும்....
பின் சூரிய குடும்பம், பூமி, இந்தியா,நமது மாநிலம்,நமது இடம்,தனிமனிதன் இந்த வரிசையில் தான் ஜாதகம் கணிக்க வேண்டும்....
அப்படி கணித்தால் தான் ஜாதக கணக்கு முதன்மை பெரும்....இல்லை என்றால் இறைவன் கணக்கு தான் முதன்மையானது....

ஆதிஅந்தமற்ற தன்மைக்குஜாதகம் போட முடியுமா???
பேரண்டத்துக்கு ஜாதகம் போட முடியுமா???

எனவே ஜோதிட கணக்கு சில நேரங்களில் இறைவனால் பொய்த்து போகும்...
இல்லை என்றால் ஜோதிடன் கடவுள் ஆகி விட முடியுமே..


இறைவன் கணக்கே முதன்மையானது..அவன் அருள் பெறுவோம்!!!

Tuesday, March 18, 2014

துர் மரணம் ஒரு ஆய்வு



மேற்கண்ட ஜாதகரின் மரணம்(ஜனவரி 2014) காட்டு யானை தாக்கி ஏற்பட்டது..

இது குறித்த எனது ஆய்வு..

லக்னம் 8 இம் பாவ தொடர்பு..இது இயற்கைக்கு மாறான வழி மரணம்...  நடப்பு தசா நாதன் குரு (மாரகாதிபதி) சுய சாரம் பெற்று ,உபநட்சத்திர அதிபதி புதன்(1,10) ஆனார்...புதனை இயக்கும் உபநட்சத்திர அதிபதியும் குரு ஆனார்...நடப்பு சந்திர புத்தி நாதன் செவ்வாய் சாரம் (8) பெற்று சுக்கிரன் உபநட்சத்திர அதிபதி ஆனார்..சுக்கிரனை இயக்கும் உபநட்சத்திர அதிபதி சந்திரன் ஆனார்....


குரு சந்திரன் இருவரும் லக்னதுக்கு 7,8 ஆக திஷா புத்தி நடந்தது மரணத்துக்கு காரணம் ஆயிற்று....


குரு சந்திர கஜ(யானை) கேசரி யோகம்(குரு சந்திரன் ->குருவுக்கு 9இல் சந்திரன் என்பதை கவனிக்க(ராகுவுடன்)) துர்பலன் ஆக யானையால் இறக்க நேரிட்டது...லக்ன உப நட்சத்திர அதிபதி ராகு(1) சந்திரன் (நின்ற நட்சத்திர அதிபதி-8) இணைவும் உள்ளது..

Thursday, March 13, 2014

தந்தை ஸ்தானம் 4-ம் பாவம்-பெண்களுக்கு!!!


ஒருவருக்கு நான்காம் இடம் தாய் ஸ்தானத்தை குறிக்கிறது.அதற்கு நேர் ஏழாம் பாவம் ஆன பத்தாம் பாவம் தந்தை ஸ்தானம் ஆக வேண்டும்.9 பாவத்தை தந்தை ஸ்தானம் ஆக பார்ப்பதற்க்கு காரணம்...9 பாவம் 10 இம் பாவத்துக்கு விரய பாவமாக வருவதால் ஆகவே இருக்க வேண்டும்.9 பாவம் தந்தைக்கு முன்பு வந்து போனவர்களை (முன்னோர்கள்) குறிக்கும்...
தந்தை என்பவர் முன்னோர் என்பதை விட ஜாதகரின் கர்மத்தை 10 இம் பாவம் வழி நடத்துபவர் ஆவார்..தந்தை என்பவர் முதலில் 10இம் பாவ பலனை வழி நடத்தி பின் 9 பாவமாக பின் நின்று மறைகிறார்.

தாய் 4 இம் பாவாக வழியில் அன்பின் வழி வழிநடத்துபவர் ஆகிறார்.4,10 பாவகம் இரண்டும் சம சப்தமாக(180 Degree) இயங்கும்..

ஒரு ஆண் குழந்தைக்கு இது பொருந்தும்..பெண் குழந்தைக்கு இது பொருந்துமா??

இங்கே ஆண் பெண் என்று பார்ப்பதை விட ஆண் தன்மை பெண் தன்மை என்றும் பார்க்க வேண்டி உள்ளது..வலது நாடி அதிகம் செயல்பட்டால் ஆண்தன்மை என்றும்,இடது நாடி அதிகம் செயல் பட்டால் பெண் தன்மை என்றும் சொல்லலாம்.எனவே ஆணுக்கு ராசியின் வல சுற்று ஆன 4,10 ம் பாவத்தை தாய் தந்தை இஸ்தானம் என்று கொள்ள வேண்டும்..
பெண்ணுக்கு ராசியின் இட சுற்று 4,10 பாவம் வல சுற்றில் 4 இம் பாவம் தந்தை ஸ்தானம் ஆக வருகிறது..10 இம் பாவம் தாய் ஸ்தானம் ஆக வருகிறது.பெண்ணை தாய் வழி நடத்துபவராக இருப்பார்.

மேலும் 100 வருடங்களுக்கு முன் சமூகத்தில் பெண்கள் வேலைக்கு செல்வது ஒதுக்கப்பட்டது..தற்போது "பெண்தன்மை என்பது ஆண் போல் செயல்படு" என்பது போல உள்ளது..சமூகம் எப்படி வேண்டுமானாலும் நாளை மாறும்...ஆனால் ராசி வலம்,இடம் நமது சுவாச வலம்,இடம் என்பது தான் ஆண் பெண் தன்மையை நிர்ணயம் செய்கிறது
..அர்த்த நாரீஸ்வரர் என்பது இட வல சுவாச தத்துவமே..

"ஒருவர் வீட்டில் ஐந்து குழந்தைகள் ஐந்து குழந்தைகளின் லக்கினம் வேறு வேறு அப்பொழுது ஒவ்வொருவருக்கும் வேவ்வேறு பாவதிபதிகள் அப்படி என்றால் வேறு வேறு அப்பாவா? இல்லை அந்தந்த குழந்தைகளிடம் தந்தையின் அணுகுமுறை வேவ்வேறாக இருக்கும்.. "  -இது எனது FB நண்பர் குமாரசுவாமி அவர்களின் கருத்து..இது எனது ஆராய்ச்சிக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது..

ஜாதக ஆராய்ச்சி-ராகுவும் யோகமும்


கேள்வி:இந்த ஜாதகருக்கு 07-03-2014 அன்று ஒரு நிகழ்வு நடந்தது..அது என்ன? Date of Birth:11-Nov-1982 12-05 am Madurai??

பதில்: ஜாதகர் அன்று அப்பா ஆனார்....
என்ன குழந்தை?
பெண்..


இந்த ஜாதகத்தை ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்வோம்...
ஜாதகருக்கு தற்சமயம் ராகு திசை சனி புத்தி நடக்கிறது.....
தசாநாதன் ராகு 11 இம் பாவ தொடர்பு பெற்று உள்ளார்...புத்திநாதன் சனி தான் நின்ற நச்சத்திர சார பலனை செய்யும்..
5,10 க்கு உரிய செவ்வாயின் சாரம் பெற்று பலன் நடத்துகிறார்..எனவே இந்த கால கட்டத்தில் ஜாதகருக்கு குழந்தை பிறந்தது.. செவ்வாய் சுக்கிரன் சாரம் பெற்றது பெண் குழந்தை பிறந்தது..செவ்வாய் 4,5,10,11 
பாவதொடர்பு...
5 இம் பாவத்தை இயக்கும் உப நட்சத்திர அதிபதியாக ராகுவும்,9 பாவ உப நட்சத்திர அதிபதியாக செவ்வாய் வருகிறார்கள் என்பதும் கவனிக்க தக்கது.

ராகு 11இம் பாவத்தில் இருந்து சுய சாரம் பெற்றது..ராகு திசை முதல் ஜாதகருக்கு யோக பலன் நடந்து வருகிறது.சனி புத்தியில் திருமணம்,வீடு,குழந்தை பிறப்பு போன்ற பலன்கள் நடந்து வருகிறது..

ஜாதகர் ஆண்குழந்தை எதிர்பார்த்தார்..பெண் என்பதால் கொஞ்சம் ஏமாற்றம்....சனி 8 இம் பாவ தொடர்பு சில ஆழ்மன ஏமாற்றங்களையும் காட்டுகிறது..
சனி 3,5,7,8,10 பாவ தொடர்பு பெற்று உள்ளது.

மேலும் குரு அந்திரம்,சுக்கிரன் சூட்சமம் காலத்தில் இந்த பலன் நடந்து உள்ளது...குரு,சுக்கிரன் 9 பாவ தொடர்பு பெற்று உள்ளனர்...
பிறந்த பெண் குழந்தையின் ஜாதகத்தில் தந்தையை குறிக்க கூடிய 4 ம் பாவக ஆரம்ப முனை பாகை கடகம் 23 degree இல் விழுந்து உள்ளது...
ஜாதகரின் லக்ன ஆரம்ப முனை கடகம் 23 degree என்பதும் குறிப்பிடதக்கது..




நண்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன..

Monday, March 10, 2014

பூர்விகத்தை விட்டு செல்வதால் என்ன லாபம்?!


ஒருவர் ஜாதகத்தில் 5,9 பாவம் என்கின்ற பூர்வ புண்ணியம் ,பாக்கியஸ்தானம் கெட்டு இருப்பின் அவர் பிறந்த இடத்தை விட்டு தொலைவில் செல்வது நல்லது.. பிறந்த இடத்தை விட்டு தொலைவில் சென்றால் அட்சாம்சாம்,தீர்க்காம்சம் மாறும்....

அப்படி மாறினால் என்ன நடக்கும்???

ஒருவனுக்கு 6 இல் இருக்கும் கிரகம் அட்சாம்சாம்,தீர்க்காம்சம் மாறினால் 7 இல் கூட வரல்லாம் 5 இல் கூட வரல்லாம்.....வெளிநாடு சென்றால் 10 இல் கூட வரல்லாம்....
கோச்சாரா பலன் ,திசா புத்தி பலனில் மாறுபாடு வரும்....எனவே கெடுதல் நடப்பது தடுக்கபடுகிறது.....கிரகத்தை மாற்ற முடியாது...எனவே நாம் மாறிக்கொள்ள வேண்டியது தான் நல்லது...

பூர்வீக இஸ்தானம் நன்றாக இருப்பவர்கள் அதை விட்டு விட்டு வெகு தொலைவு சென்றால் பூர்விக நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போகும்.