Wednesday, January 15, 2014

கேது -ஓர் மெய் ஞான விளக்கம்


ராகு கேது வை பற்றி இன்று எண்ணில் அடங்கா குழப்பங்கள் ஜோதிடர் மற்றும் மக்களிடையே நிலவுகிறது.
ராகு கேதுவை பற்றிய புராண கதைகள் நமக்கு தெரியும்....இன்னும் அதையே நம்பி கொண்டு இருக்கலாமா??
ஜோதிடத்தில் கேது ராகு திசையை வைத்து பயம் காட்டும் ஜோதிடர் பலர் உண்டு...
உண்மையில் கேது யார்?கேது வின் அதி தேவதை விநாயகர் என்று சொல்ல படுவதன் காரணம் என்ன??

கேது =ஓம்(ஆ உ ம)=விநாயகர்

ஆ =மூலம் நட்சதிரம்(தனுஷ்) =முலாதாரம் சக்கரம்
உ =மகம் நட்சதிரம்(சிம்மம்) =அனாகதம் சக்கரம்
ம =அஸ்வினி நட்சதிரம்(மேஷம்) =அக்ஞை சக்கரம்

அதியான சிவத்தில் இருந்து ஓம் என்ற நாதம் தோன்றியது.. அந்த ஓம் இல் இருந்து தான் பல அணுக்கள் ,பெரும் அணுக்கள்( நட்சத்திரகள்,கோள்கள்,) தோன்றின..அதனால் தான் சிவத்தை வழிபடும் முன் விநாயகரை முதலில் வணங்கி செல் என்று சொல்ல பட்டது.. அதாவது ஓம் என்ற மந்திரம் ஜெபிக்க ஜெபிக்க ஆதி சிவா என்ற பேருண்மையை உணரமுடியும் என்பதே இதன் பின்னால் உள்ள ரகசியம்.



[[மூலாதார சக்தி மட்டுமே மிகுந்த மனிதன் காட்டு மிராண்டி யாகவும் ..பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் அவன் யோகி ஆவதை மேல் கண்ட படம் விளக்குகிறது.]]

மனிதனுக்கு மட்டும் அல்ல ..மற்ற உயிர்களிலும் இந்த குண்டலினி சக்தி உண்டு...அந்த சக்தியானது அந்த உயிரின் பரிணாம வளர்ச்சிக்கு தகுந்தபடி இருக்கும்.
ஜோதிடத்தில் மிக வலுவான கிரகம் கேதுவே...ஏன் எனில் முதன் முதலில் ஒரு அணு சிவாவில் இருந்து உண்டாகும் போது அதன் சக்தி தான் கட்டமைக்க படுகிறது.அந்த சக்தியை கட்டமைப்பது கேது-ராகு என்ற குண்டலினி சக்தியே.
மூலாதார,அனாகத,ஆக்ஞை சக்கரத்தை ஆள்பவர் கேதுவே.
சூரிய குடும்பத்தில் கேது என்பவர் சூரியனின் நிழல் என்று சொல்லலாம்...


நமது ராசி மண்டலத்தில் அஸ்வினி தான் முதல் நட்சத்திர கூட்டம்...அதே சமயம் அஸ்வினி நட்சத்திரத்தில் தான் சூரியன் உச்சம் பெறுகிறார்...
மகம் நட்சத்திரதில் ஆட்சி பெறுகிறார்...மூலம் நட்சத்திரதில் நட்பு
பெறுகிறார்.



சூரியன் என்கிற ஆத்மாவின் இன்னொரு புறமே குண்டலினி சக்தி என்கிற கேது ஆவார்.....கேது நல்ல நிலையில் உள்ள ஜாதகர் ஆத்ம ஞானம் பெரும் பாக்கியத்தை பெறுகிறார்..



கேது வலு பெற்றால் ஆத்ம ஞானம் சித்திக்கும்.உண்மையான யோகிகள் அனைவரின் ஜாதகத்தில் கேது வலு பெற்று இருக்கும்.
ஜோதிட கலையை உலகிற்கு அளித்தவர்கள் கேது வின் ஆதிக்கம் பெற்ற ரிஷிகள் தான்...
ஆனால் அந்த கலை இன்று பலரிடம் மாட்டி கொண்டு படாத பாடு படுகிறது.. :)
வெறுமனே புதன் ஆதிக்கம் இருந்தால் ஜோதிட கணிதம் நன்கு செய்ய முடியும்..ஜோதிடர் ஆகலாம்.ஆனால் கேது நல்ல முறையில் இருப்பின் மட்டுமே ஜோதிடருக்கு இறை அருள் துணை நிற்கும்..

குண்டலினி சக்தியை குறிக்கும் குறியீடுயாக பாம்பை சொல்லி வைத்து சென்றனர் நம் யோகிகள்..இப்போது நீங்களே சொல்லுங்கள் ராசி மண்டலத்தில் ராகு கேது ஏன் பின்புறமாக சுற்றுகிறார்கள் என்று??.. அடுத்த பதிவில் ராகுவை பார்ப்போம்..

No comments:

Post a Comment