Thursday, February 6, 2014

எனக்கு ஏன் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கலை?



நாம் நம்மை பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள்ளலாம்..ஆனால் உலகம் நம்மை பற்றி என்ன நினைக்கிறது ..உண்மையில் நம் உண்மை நிலை என்ன என்பதை நம் ஜாதகம் சொல்லி விடும்


நாங்களும் பையனுக்கு அன்சு ஆறு வருஷமா கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறோம் என்பவரா நீங்கள்...அப்போ இந்த பதிவ படிங்க ..தெளிவு பெருங்க...


ஜாதகத்தில் லக்கனம் நன்றாக இருந்தால் தான் பையன் நல்லவன் தெளிவான சிந்தனை கொண்டவன் போன்ற கருத்துக்கள் உங்களை சுற்றி இருப்பவரிடம் இருக்கும்.

இரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் தான் பையன் (or பொண்ணு) பாக்குறதுக்கு லட்சனமாக இருக்கிறான்(ள்) என்ற கருத்து மக்களிடம் இருக்கும்.அந்த பையனோட குடும்பம் நல்ல குடும்பம் என்ற பெயர் ஊர் மத்தியில் இருக்கும்.

மூன்றாம் பாவம் நன்றாக இருந்தால்தான் பையன் வல்லவன் என்ற பெயர் இருக்கும்.

நான்காம் பாவம் நன்றாக இருந்தால்தான் "பையன் கார் கூட வெச்சு இருக்கான்.சொந்த வீடு இருக்கு" என்பன போன்ற பேச்சுகள் உலா வரும்.பையனோட அம்மா ரொம்ப நல்லவா (பொண்ணுக்கு மாமியார் :) )என்ற பேர் இருக்கும்.

ஐந்தாம் பாவம் நன்றாக இருந்தால் பையன் யோக்கியன் (ஒழுக்கமான பையன் ) என்ற இமேஜ் இருக்கும்.

ஆறாம் பாவம் நன்றாக இருந்தால் தான் கடன்/நோய்/வழக்கு இல்லாமல் இருக்கும்.அதெல்லாம் இருந்தா உண்மை தெரின்சா எந்த பொண்ணு தான் கல்யாணம் செய்துக்க முன் வருவா??கல்யாணம் முடின்சாலும் பிரச்சினை தானே?

ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் தான் நண்பர்கள்,சமுதாய தொடர்பு நன்றாக இருக்கும்.

எட்டாம் பாவம் நன்றாக இருந்தால் தான் ஆயுள் பலம் நன்றாக இருக்கும்.[[ஏழு எட்டு பாவம் நன்றாக இருந்தால் தான் தேனிலவு நன்றாக இருக்கும்]].

ஒன்பதாம் பாவம் நன்றாக இருந்தால் தான் பையனுக்கு அப்பன் பாட்டன் சொத்து எல்லாம் இருக்குபா என்ற பேச்சு இருக்கும்.

பத்தாம் பாவம் நன்றாக இருந்தால் தான் "அவனுக்கு என்னப்பா கை (பை) நெறைய சம்பாதிக்கறான்..." என்பார்கள்...பையன் என்ன வேலை பாக்கிறான் என்பது தானே பெண் வீட்டார் முதல் கேள்வி...கல்யாணத்துக்கு முதலில் பார்க்க வேண்டிய பாவமாக பத்தாம் பாவம் ஆகி விட்டது.. :)

பதினோராம் பாவம் நன்றாக இருந்தால் தான் அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டுவாள்.

பணிரெண்டாம் பாவம் நன்றாக இருந்தால் தான் கல்யாணத்துக்கு அப்புறம் கூட நிம்மதியா தூங்க முடியும்..

இல்லைனா எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் வேண்டும் என்ற பாட்டு தான்....

கல்யாண சந்தையில் மேற்கண்டவற்றின் தகுதிக்கு ஏற்ப (மார்க்100 க்கு எவ்வளவு :) ) என்பதுக்கு ஏற்ப மணமகன்/மணமகள் கிடைக்கும்.

இதற்கு அப்புறம் தான் பத்து பொருத்தம் எல்லாம் workout ஆகும்..!!!!

1 comment:

  1. யாருக்காவது பன்னிரண்டு இடமும் நன்றாக இருக்காது..

    ReplyDelete