பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் வேறு ஒரு கோளையோ, நட்சத்திரத்தையோ, நட்சத்திர மண்டலத்தையோ மையமாக வைத்தே சுற்றுகின்றன. காரணம் அவைகளுக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசை (Gravitation). இந்த ஈர்ப்பு விசை அவற்றை, ஒன்றுடன் ஒன்றாக இணைத்து இயங்க வைத்துக் கொண்டிருக்கும்.
சூரியன் போன்ற எண்ணிலடங்கா நட்சத்திரங்களைக் கொண்டது இந்தப் பால் வெளி மண்டலம் கேலக்ஸி (Galaxy).
நமது பால்வெளி மண்டலத்தில்(Galaxy) உள்ள நட்சத்திரத்தின் எண்ணிக்கையே இன்னும் விஞ்ஞானக் கணக்கீட்டால்கூட கண்டறியாத நிலையில் எத்தனை பால்வெளி மண்டலங்கள், அதில் உள்ள நட்சத்திரங்கள் எவ்வளவு என்பது பற்றி அறிவது தற்போதைய காலகட்டத்தில் உள்ள அறிவியல் வளர்ச்சியில் சிரமமான காரியம்.
பூமி மற்றும் இதர கிரகங்கள் சூரியனை சுற்றுகிறது... சூரிய மண்டலம்(குடும்பம்) ஆனது நம்முடைய Galaxy யை சுற்றி வருகிறது
ஒரு வீட்டின் கூரையில் மாட்டப் பட்டிருக்கும் மின்சார விசிறி (Fan) கிடையாகச்சுற்றுகிறது. நமது பால் வெளி மண்டலமும்(Galaxy ) அப்படித்தான் சுற்றுகிறது.ஆனால் நமது சூரியன், பால்வெளி மண்டலத்தில் இருந்து கொண்டே,மேசையில் இருக்கும் மின்விசிறி (Table Fan) போல, பால்வெளிமண்டலத்துக்குச் செங்குத்தாக சுற்றுகிறது.
https://www.youtube.com/watch?v=0jHsq36_NTU
இந்த link இல் சென்று பார்த்தால் நன்கு புரியும்
நமது பூமிக்கு நடுவாக பூமத்திய ரேகை இருப்பது போல, பால்வெளி மண்டலத்துக்கும் நீளமான, ஒரு மத்திய ரேகை உண்டு. இதை Galactic Equator என்று சொல்வார்கள்.
நமது சூரியன் இப்படிப் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையை (Galactic Equator) சந்திக்க எடுக்கும் காலம் 26,000 வருடங்கள்.
ஏறக்குறைய 170 பில்லியன் பால்வெளி மண்டலங்கள்(Galaxy ) நம்முடைய (!!) Universe -ல் உள்ளன
(There are probably more than 170 billion galaxies in the observable universe -http://en.wikipedia.org/wiki/Galaxy)
இது போல பல பேரண்டங்கள்(universe) உள்ளன. :) மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்......
Reference:
No comments:
Post a Comment