ராகு ராசி மண்டலத்தில் (அண்டத்தில)கீழ் வரும் நட்சத்திர கூட்டங்களை யும்,பிண்டத்தில் கீழ்வரும் சக்கரங்களையும் ஆளுமை செய்கிறார்.
திருவாதிரை = விசுத்தி சக்கரம்
சுவாதி =சுவாதிஷ்டினம் சக்கரம்
சதயம்=மணிப்புரகம் சக்கரம்
கேது சூரியனின் நிழல் என்றால் ராகு சந்திரனின் நிழல்.
காளி=ராகு
சிவா என்ற வெறுமை-ல் இருந்து காளி=ராகு தோன்றுகிறது.
சிவனின் சுவாதிஷ்டினம்,மணிப்புரகம் என்கிற சக்கரத்தில் இருந்து ராகு=காளி தோன்றுகிறது. இதை தான் கிழ் கண்ட படம் சொல்ல முயற்சி செய்கிறது.[படத்தில் காளியின் கால் சிவனின் மணிப்புரகம் சக்கரத்துக்கு மேல் இருக்கிறது.]
இதுவே பெண்களுக்கு சுவாதிஸ்டினா சக்கரம் ஸ்துல உடலில் கருப்பையை ஆளுமை செய்கிறது.
மணிப்புரக சக்கரம் மனிதன் மனத்தை ஆளுமை செய்கிறது....மணிப்பூரக ராகு-சந்திரன் உடன் இணைந்து கெட்டால் மனம்பைத்தியம் பிடிக்கிறது.
ராகு இந்த சக்கரங்களை ஆளுவதால் தான் ராகு ஜாதகத்தில் கெடும் போது காமம் போதை என ஜாதகன் அடிமை ஆகிறான்.ராகு நல்ல நிலையில் இருக்கும் போது அதிக உயிர் சக்தி பெறுகிறான்.திரைப்படம்,காவியம் ஓவியம்,இலக்கியம் போன்றவற்றில் தன் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறான்.
விசுத்தி சக்கரம் நன்றாக செயல் படும் போது சங்கீதம் ,இசை போன்ற வற்றில் ஈடுபடுகிறான்.கெடும் போது விஷம பேச்சில் ஈடுபடுகிறான்.
இந்த சக்கரங்கள் நமது சூட்சம உடலை ஆளுமை செய்கின்றன... ஸ்துல உடலில் நோய் வருகிறது என்றால் அதன் அறிகுறி சூட்சம உடலி தான் முதலில் தெரியும்....இதை வைத்து தான் நாடி மூலம் நோய் அறிந்து சொன்னார்கள் நமது சித்த யோகிகள்..
உண்மை இப்படி இருக்க ...ராகு கெட்டால் பாம்புக்கு பால் முட்டை வை என்று சொல்லுகிறார்கள் சில ஜோதிடர்கள் :) பாம்பு பால் முட்டை சாப்பிடாது என்பது வேறு விசயம்..
No comments:
Post a Comment