லக்னம் ஓர் பார்வை
கரு உண்டான பின் அது படி படியாக வளர தொடங்குகிறது..அந்த உண்டான கருவில் அந்த கருவின் உடல் மன அமைப்புக்கு உட்பட்ட படி ஏதாவது ஒரு உயிர் உள்ளே நுழையும்.எந்த உயிர் என்பதை தீர்மானிப்பது அந்த உயிரின் முன் பல ஜென்ம பாவ புண்ணியங்களே...அவ்வாறு ஒரு உயிர் ஒரு கருவில் (பிண்டத்தில்) உட்புகும் போது....அது தனக்கு ஏற்றவாறு ஏதாவது சக்கரத்தின் வழியாக உடம்பில் புகும்.(மூலதாரம்,அனாகதம்,ஆக்னா)....பெரும்பாலும் அந்த ஆத்மா தலை வழியாக ஆக்னா வில் நுழைந்து விடும். இவ்வாறு நுழையும் நேர உதய ராசியும் குழந்தை தலை வெளிவரும்(பிறக்கும் போது) உதய நேர ராசியும் ஒன்றாக இருக்கும்.நம்மால் கருவில் ஆத்மா புகும் நேரத்தை காண முடியாது.அது 5,6,7,8 வது என எந்த மாதம் வேண்டுமானால் நடக்கலாம்.
இங்கே ஆத்மா என்பதை ஜீவ ஆத்மா என்று கொள்ள வேண்டும்.....
உடல் இறந்த பின் அந்த உயிரில் (அணுவில்) பதிவான ஆழ்ந்த வாசனைகளை எடுத்து கொண்டு ஜீவ ஆத்மா வெளியேருகிறது....மீண்டும் பிறக்க சரியான கால கட்டம் இறைவனால் அமைக்கப்படும் போது....அந்த வாசனைகள்(பாவ,புண்ணிய,காம பதிவுகள்) உடன் ,அந்த ஜீவ ஆத்மா கருவுக்குள் நுழைகிறது..பிறந்தவுடன் சுவாசிக்க சுவாசிக்க அந்த வாசனைகள் மீண்டும் உயிர் பெறுகின்றன...
லக்னம் என்பது ஒரு ஆத்மா உடலில் புகும் நேரத்தில் உதயமாகும் ராசியை குறிக்கிறது எனலாம்.அதே ராசி தான் குழந்தை இந்த பூமியில் முதல் சுவாசத்தை சுவாசிக்கும் போதும் அமைகிறது எனலாம்.
பெரும்பாலும் குழந்தை பிறக்கும் போது உயிர் அந்த உடலோடு ஒட்டியும் ஒட்டாமல் தாமரை இலை தண்ணீர் போல இருக்கும்.அதன் சக்தி ஆக்னாவில் இருக்கும்.
கால போக்கில் அந்த உயிர் சக்தி படி படியாக கிழ் இறங்கி முலாதாரத்துக்கு வந்து விடுகிறது...கடைசியில் அந்த உடல் தான் நான் என நம்ப ஆரம்பித்து விடுகிறது.அதன் பின் கால போக்கில் நான் super star, power star என நம்ப ஆரம்பித்து விடுகிறது.. :)
No comments:
Post a Comment