1, 5, 9 தின் ஆரம்ப முனையை (அஸ்வினி மகம் மூலம்)கேதுவே ஆள்கிறார் .....ராகு 3, 7 ,11 பாவத்தை ஆள்கிறார் (திருவாதிரை ,சுவாதி சதயம் )..3 7 11 .பாவம் என்பது தன்னம்பிக்கை,வீரியம் ,வெற்றி எனபது அனைவரும் அறிந்ததே .......புற வெற்றி கர்மாவை சேர்க்கவே செய்கிறது ........ ராகு முடிந்த வரை ஆன்மிகத்தில் நுழைவதை தாமத படுத்தவே செய்யும்.....ஆன்மிகத்துக்கு கேதுவும் ,புற வாழ்க்கை வெற்றிக்கு ராகுவும் ஆதிக்கம் செய்கிறார்கள் ......
மேலும் சுக்கிரன் கேதுவின் நட்சதிரத்தை அடுத்து வருகிறது ....கேதுவே மீண்டும் ஆத்மா சுக்கிலதுக்குள் (சுக்கிரன்) நுழைய வேண்டிய அவசியம் உள்ளதா ,இல்லையா என்பதை காட்டுகிறது .... சூரியனின் நிழல் ராகு ...ஆத்மாவை மறைக்கும் மாயைகள் எல்லாம் ராகுவே....
சந்திரனின் நிழல் கேது ..மனதை மறைப்பது .... அதாவது மனதை அழித்து மனமற்ற நிலையை தருவது கேது ...
எனவே ஆன்மிகத்தில்/வாழ்வில் மாயையை ஏற்படுத்துவது ராகு , தெளிவை ஏற்படுத்துவது கேது....
******************************************************************************************
இப்பிரபஞ்சம் பேராற்றுலுடனும் பேரறிவுடனும் இயங்குகிறது...ஆற்றல் (ராகு ) அறிவு (கேது ) நமக்கு இப்பிரபஞ்சத்தில் இருந்து ராகு-கேது பெற்று தருகிரார்கள் ... ,
ஆற்றல் (ராகு ) அதிகம் இருப்பின் அகங்காரம் வருவது மனித (மன ) இயல்பு... எனவே ராகுவின் எதிர் முனை யான கேது (அறிவு ) அதை சமன் படுத்த வேண்டும் ..எனவே தான் ராகு கேது நேர் எதிர் செயல் பட்டு இப்பிரபஞ்சதில் சமநிலையை ஏற்படுத்துகிறது ....
அகோரிகள்,நாகாக்கள், பைராகிகள்,சக்தி உபாசர்கள் ராகுவின் ஆதிகத்திலும் , ஞானிகள் கேதுவின் ஆதிகத்திலும் ,சித்தர்கள் ,யோகிகள் ராகு -கேது இரண்டின் ஆதிக்கம் நிறைந்தவர்கள் என்பது என் புரிதல்.....
**********************************************************************************************
இது ஒரு ஆராய்ச்சி கட்டுரை மட்டுமே .. உங்கள் ஒத்த/ மாற்று கருத்துகளை பகிருங்கள் ஆத்ம நண்பர்களே ...
No comments:
Post a Comment