கேள்வி:
திருச்சியில் பிறந்த இரட்டை குழந்தைகள் இருவருடைய உடல் நலத்திலும் பிரச்னை. இருவருக்கும் அறுவை சிகிச்சை கூட வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் ,.
குழந்தைகளின் ஆயுள் எப்படி உள்ளது?
இருவருக்குமே அறுவை சிகிச்சை தேவை படுமா அல்லது யாரவது ஒருவருக்கு மட்டும் அறுவை சிகிச்சை தேவை படுமா?
முக்கியமான தகவல் இருவருக்கும் ஒரு நிமிட பிறந்த நேர வித்தியாசம் மட்டுமே .
பிறந்த தேதி. 14/6/2012
முதல் குழந்தை பிறந்த நேரம்:18.14 pm
இரண்டாவது குழந்தை பிறந்த நேரம் :18.15 Pm
பிறந்த ஊர்: Trichirapalli .
(மேற்கண்ட கேள்வி KP ஜோதிட Expert,FB நண்பர் சரவணராஜ் அவர்கள் ஆய்வுக்காக கேட்ட கேள்வி)
என்னுடைய பதில்:
இரண்டாவது குழந்தைக்கு செவ்வாய் 6 இம் பாவ உப நட்சத்திர அதிபதியாக வந்து மற்றும் 10 பாவ உப நட்சத்திர அதிபதியாகவும் வருவதால்,6 இம் பாவத்தின் பலனை 10 பாவம் விருத்தி செய்யும் என்பதால் நோய்யின் தன்மை தீவிரம் அடைவதையும்...செவ்வாய் அறுவை கிகிச்சை காரகன் என்பதால் அது அறுவை கிகிச்சைக்கு கொண்டு சென்று இருக்கும்....மேலும் செவ்வாய் 6இம் பாவ குறிக்காட்டிகளான சுக்கிரன் கேதுவின் நட்சத்திரம் உப நட்சத்திரத்தில் உள்ளது...
முதல் குழந்தைக்கு செவ்வாய் 6 இம் பாவ உப நட்சத்திர அதிபதியாக வந்து சந்திரன் 10 பாவ உப நட்சத்திர அதிபதியாக வந்து உள்ளது..இங்கே சந்திரன் 5இம் பாவ குறிக்காட்டி ஆவதுடன் 6இல் உள்ள கேதுவின் நட்சத்திரத்தில் இருப்பினும் கூட தன் சொந்த உப நட்சத்திரத்தில் நின்று 5பாவ பலனை தருவார்...6 பாவம் நோய்வாய்ப்படுதல்,5 இம் பாவம் குணமடைவதை காட்டுகின்றன....இந்த குழந்தைக்கு அறுவை கிகிச்சை தேவை பட்டு இருக்காது...
இங்கே ஒரு நிமிட இடைவெளியில் குழந்தைகள் பிறந்து இருப்பினும் கூட, பத்தாம் பாவ உப நட்சத்திரம் மாற்றம் பெறுவது...இரு குழந்தைகளுக்கும் வெவ்வேறு கர்ம வினைகளை குறிகாட்டுகின்றன..
நடந்த உண்மை:இரண்டாவது குழந்தைக்கு தான் இருதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தேர்யது .