இவரது ஜென்ம நட்சத்திரம் சனி ஆகி அவர் சுக்கிரன் உப நட்சத்திரத்தில் நின்றார்...இவர்கள் 3 4 7 10 12 குறிப்பினர் ஆவது ஜாதகரின் தகிரியம்,ரிஸ்க் எடுத்தல்,தன்நம்பிக்கை,பொது வாழ்வில் வெற்றி,புகழ் போன்றவற்றை காட்டுகிறது..
12ம் பாவ குறிப்பினர் ஆவது மட்டும் சிறு குறைபாடு..இவர் எதிரிகளிடம் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.
லக்ன உப நட்சத்திர அதிபதி செவ்வாய் 10 பாவத்துக்கும் உப நட்சத்திர அதிபதியாக வருவது சிறப்பு..அரசியலில் இவர் வீரத்துடன் செயல் ஆற்றுவதற்க்கு இந்த அமைப்பு காரணம் ஆகிறது...செவ்வாய் 8 12 க்கும் நட்சத்திர அதிபதியாக வருவது விபத்து,உயிர் கண்டம் போன்றவற்றை தரும்...செவ்வாய் இவருக்கு 1 2 4 5 6 12 குறிப்பினர் ஆவது நெறைய எதிரிகளை பெற்று தருவார் என்பதை காட்டுகிறது..
இவருக்கு 2 5ம் பாவங்கள் கேது சனி ஆள்வது குடும்பம் இல்லை.. பத்தாம் பாவத்தில் ஐந்து கிரகங்கள் உள்ளன.... சுக்கிரன் சனி புதன் சூரியன் கேது உள்ளன....சூரியன் கேது 10ல் உள்ளதால் குடும்பம் இல்லாதவராகவும் அதே சமயம் அரசாள்பவராகவும் உள்ளார்..
நடப்பு சந்திர திசை 1 3 4 7 9 10 12 தொடர்பு பெறுவதும்,ராகு புத்தி 3 4 10 தொடர்பு பெறுவதும் இவர் பிரதமர் ஆவதை உறுதி செய்கின்றன..ராகு 3 4 10 தொடர்பு பெறுவது அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து பதவி ஏற்பதை காட்டுகிறது.. 8 வருடம் கழித்து வரும் (2021 அக்டோபர் க்கு பிறகு வரும் காலம்) செவ்வாய் திசை தான் இவருக்கு சோதனை காலம்...செவ்வாய் 3ம் பாவ உப நட்சத்திர அதிபதியின் நட்சத்திரத்தில் இருந்து தன் சொந்த உப நட்சத்திரத்தில் இருந்து 1 2 4 5 6 8 12 தொடர்பு பெற்று திசை நடத்துவது நோய்,விபத்து போன்ற உயிர் கண்டங்களை தரும்....